TCS, Infosys ஊழியர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்படுகிறது.
அதிபர் பதவியைப் பிடிக்க தான் கையில் எடுத்த விசயங்களில் ஒன்றான; “Outsourcing” மூலம் ஏற்படும் வேலையில்லா அமெரிக்க மக்களின் வாக்குகளைப் பெற, குறிப்பாக இந்தியாவிற்கு வேலைகளை outsource செய்வதும் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு வேலைக்கு வருவதை தடுக்க பல புதிய விதிகள் ஒபாமா அண்ணாச்சியால் ஏற்படுத்தப்பட்டன.
குறிப்பாக இந்தியர் ஒருவரை அமெரிக்காவிற்கு அனுப்பி அங்கே ஒரு வேலையை முடிப்பதை விட.. அமெரிக்காவிலேயே உள்ள ஒரு அமெரிக்கரை அந்த வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் எனும் விதியால் TCS, Infosys ஆகிய நிறுவனங்களில் இருந்து அமெரிக்காவிற்கு வேலை நிமித்தமாக செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 20% – 30% வரைக் குறைந்துள்ளது.
உயர்த்தப்பட்ட விசா கட்டணம் மற்றும் தேவையில்லாத கெடுப்பிடி காரணமாக L-1 வகை விசா வழங்குவது மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனம் அமெரிக்காவில் ஒருவருக்கு சம்பளம் கொடுப்பது என்பது யானைக்கு தீனி போடுவது போன்றதாகும்.
அமெரிக்க நிறுவனங்களுக்கே சம்பளம் கொடுப்பது கட்டுப்படியாகவில்லை என்றுதான் இந்தியாவிற்கு வேலைகளைக் கொடுகின்றனர். ஆனால் ஒபாமா அண்ணாச்சி நமது நிறுவனங்களை அமெரிக்கர்களுக்கு சம்பளம் குடுக்கச் சொல்கிறார்.