பரிதாப நிலையில் 30,000 டெலிகாம் துறை ஊழியர்களின் நிலை
இந்திய டெலிகாம் நிறுவனங்களின் மோசன நிலைக்கு ஜியோவின் சேவை வருகை மற்றும் அதனால் ஏற்பட்ட விலை குறைப்புகள் போன்றவையே காரணம் ஆகும். ஜியோவின் வருகை வாடிக்கையாளர்களை இதனை நாட்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டது எல்லாம் சென்ற மாதத்துடன் முடிந்து போனது.
தற்போது ஜியோவின் ரீசார்ஜ் பேக்குகள் அனைத்தும் பிற போட்டி நிறுவனங்களை விட அதிகமாகவே உள்ளது. வேகமாக அதிக வாடிக்கையாளர்களைப் பெற ஜியோ எடுத்த முடிவால் போட்டி நிறுவனங்கள் நட்டம் அடைந்த மட்டும் இல்லாமல் சிறு நிறுவனங்கள் விற்பனைக்கு வந்தன.
அதில் முக்கியமான ஒன்று கடனை அடைக்க முடியாமல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மூடப்பட்டது. இதற்கு அதிகப்படியான கடன் மற்றும் ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதில் ஏற்பட்ட தோல்வி ஆகும். இதன் விளைவு நேரடியாக 5,000 நபர்கள் வரையிலும் மறைமுகமாகப் பலருக்கும் வேலை வாய்ப்புகள் பறிபோனது.
மேலும் டிடிஎ சேவையை விட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் உரிமத்தினைப் புதுப்பிக்காமல் வெளியேறுகின்றது. இதனாலும் ஆயிரம் கணக்கில் வேலை வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் டெலினார் நிறுவனத்தினை வங்கியிருப்பது மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மொபைல் சேவை மட்டும் இல்லாமல் டிடிஎஸ் சேவையில் இணைய இருப்பது போன்ற முடிவுகளாலும் பல ஆயிரம் நபர்களுக்கு வேலைப் போய்வருகின்றது.
மறுபக்கம் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் இணைவாலும் பலருக்கு வேலைப் பறிபோகின்றது. இந்த நிலை இப்படியே தொடர்வதால் 30,000 to 1,00,000 நபர்கள் வரை டெலிகாம் துறையில் வேலையினை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
இளம் வயது ஊழியர்களுக்கு அதிலும் குறிப்பாக 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் இருந்தாலும் மூத்த அதிகாரிகளுக்குச் சிரமம் தான் எனப்படுகின்றது. டெலிகாம் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் , மனித வளம், கணக்கு, ஃபினாஸ் துறையில் அதிகளவில் வேலை வாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளது. இந்தப் பிரிவு ஊழியர்களுக்குப் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கவும் முடியாது என்றும் இதனால் மத்திய நிலை ஊழியர்கள் பரிதாப நிலையில் உள்ளனர்.
ஆட்டோமேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் வாடிக்கையாளர் சேவை பிரிவில் வேலை வாய்ப்பு இழப்புகள் அதிகளவில் உள்ளது. எனவே டெலிகாம் துறையில் வேலை வேண்டும் என்றால் ERP, செயற்கை நுண்ணறிவு (AI), போன்றவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.