ஹெல்த்தியா இருக்க கை தட்டுங்கள்!

பயன்கள்:

ம் அபிமான கிரிக்கெட் வீரர் சிக்ஸ் அடிக்கும்போது, மிகப்பெரிய விஷயத்தை ஒருவர் செய்யும்போது அவரைப் பாராட்ட, நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த கை தட்டுவோம். சாதாரணமான விஷயம் என்று நினைக்கும் கைதட்டுதலில் நினைத்துக்கூட பார்க்க முடியத அளவுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. கை தட்டுவது ஒரு யோகப் பயிற்சிக்கு இணையானது. தினமும் கைதட்டும் பயிற்சி செய்துவந்தால், மருந்துகளால்கூட ஏற்படுத்த முடியாத நல்ல மாற்றங்கள் கிடைக்கும்

கை தட்டுவதன் நற்பலன்கள்

நம் கைகளில் 39 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கைகளைத் தட்டும்போது ஏற்படும் உராய்வினால் வெப்பம் ஏற்பட்டு, உள்ளங்கையில் இருக்கும் ரிசப்டார்கள் தூண்டப்படுகின்றன.  இதனால், ‘சுஜோக்’ சிகிச்சை முறையில் கிளாப்பிங் தெரப்பியைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, கைப் பள்ளதாக்குப் புள்ளி (Hand valley point), கட்டைவிரல் அடிப்புள்ளி (Base of thumb piont), மணிக்கட்டுப்புள்ளி (Wrist Point), கட்டை விரல் நகப்புள்ளி (Thumb nail point) ஆகிய முக்கியமான புள்ளிகள் நன்கு தூண்டப்பட்டு பலன்கள் கிடைக்கின்றன.

*ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பிரச்னைகள் கட்டுக்குள் வருகின்றன. நுரையீரல் வலுப்பெறும்.

*கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி சரியாகும்.

*ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.

*செரிமானத்தை மேம்படுத்துகிறது.

*நினைவாற்றலை மேம்படுத்துகிறது. கவனத்திறனைக் கூர்மையாக்குகிறது.

*நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

*தினமும் அரை மணி நேரம் கை தட்டுவதால், சர்க்கரை நோய், ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, இன்சோம்னியா எனும் உறக்கமின்மைப் பிரச்னை, கண் பிரச்னை ஆகியவை நீங்கும்.

*எப்போதும் ஏ.சி-யிலேயே இருப்பவர்கள், வியர்வை சுரப்புக் குறைவாக உள்ளவர்கள் கிளாப்பிங் தெரப்பி செய்வதால், ரத்த ஓட்டம் மேம்பட்டு, ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

*மூளையின் நியூரோடிரான்ஸ்மீட்டர்கள் தூண்டப்பட்டு, செரட்டோனின் சுரப்பு மேம்படும். இதனால், மூளை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்படுகிறது.

*உற்சாகம் குறைவாக, சோர்வாக இருக்கும் நேரத்தில் கை தட்டினால், அது நம் மனநிலையை மாற்றி உற்சாகப்படுத்தும்.

*ரத்த ஓட்டம் மேம்படுவதால், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் இயல்பாகும்.

*குழந்தைகளுக்குக் கை தட்டுவதைக் கற்றுத் தருவதால், அவர்களின் ‘பைன் மோட்டார்’ திறமைகள் எனப்படும் எழுதுவது, ஓவியம் வரைவது போன்ற திறன்கள் மேம்படும்.

*கை தட்டுவதைப் பற்றிய ஒரு சூப்பர் மேட்டர்தானே இது! உற்சாகமாகக் கை தட்டுங்க; ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்குங்க!

 

 

 

http://tmpooja.com/shop/idols-handicrafts-hand-craft-handcraft/ganesha-face/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *