Health

ஓமம் பொடி

பயன்கள்: 

வயிற்று கோளாறுகள்

ஓமத்தை நீரில் போட்டு காய்ச்சி, குளிர வைத்து, அதனை குடித்து வந்தால், செரிமான பிரச்சனை, வாய்வுத் தொல்லை, வயிற்று வலி போன்ற பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கும்.

வாய் பிரச்சனைகள்

வாய், நாக்கு போன்றவற்றில் புண் இருந்தாலோ அல்லது ஈறு பிரச்சனைகள் இருந்தாலோ, அவற்றிற்கு ஓமம் நல்ல தீர்வைத் தரும். அதற்கு ஓமம் மற்றும் சோம்பை பொடி செய்து, தேன் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.

ஆஸ்துமா

ஆஸ்துமாவிற்கு ஓமம் நல்ல நிவாரணியாக விளங்கும். அதற்கு ஓமத்தை கசாயம் செய்து தொடர்ந்து குடிக்க வேண்டும்.

மூச்சுத்திணறல்

ஓமத்தை வறுத்து ஒரு துணியில் போட்டு, மார்புக்கு ஒத்தடம் கொடுத்து வந்தால், மூச்சுத்திணறல் குறையும்.

குளிர் காய்ச்சல்

ஓமம் மற்றும் சோம்பை பொடி செய்து, தேனுடன் சேர்த்து குலைத்து சாப்பிட, குளிர் காய்ச்சல் குணமாகும்.

குழந்தை களின் வயிற்று வலி நீங்க…

ஓமம், ஜாதிக்காய், ஏலக்காயை சம அளவில் எடுத்து பொடி செய்து, தாய்பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், வயிற்று வலி அகலும்.

 

BEST HERBAL PRODUCTS 

The Bishops weed Powder (Omam Powder)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *