குற்றாலம் மூலிகை கடைகளில் திடீர் தீ விபத்து

குற்றாலத்தில் குற்றாலநாதர் கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மூலிகை பொருட்கள் கடைகளில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையிலும் பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். குற்றால சீசனுக்காக குற்றாலநாதர் கோயில் அருகில் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் வடக்கு சன்னதி தெருவில் உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 4 கடைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. சுமார் 3 மணி நேரம் போராடி தியணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த மூலிகைகள் அனைத்து தீயில் சாம்பலாகின. தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் சேதமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீசன் முடிவடைந்ததால் பல கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதானால் பெரிய அளவிலான சேதம் இல்லாமல் போனது. மேலும் கோயிலின் வடக்கு சன்னதி கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *