சாம்சங் நிறுவனத்தை பந்தாடிய சியோமி…..
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சியோமி முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிக வளர்ச்சியை காட்டி சியோமி முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டின் காலாண்டு நிலவரப்படி ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் 73 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், சியோமி நிறுவனம் 82 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து முதலிடம் பிடித்துள்ளது.
முந்தைய காலாண்டை விட 17% வளர்ச்சியை சியோமி பதிவு செய்துள்ளது. மேலும், விவோ, ஒப்போ மற்றும் லெனோவோ உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கின்றன.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங் அதிக கவனம் செலுத்தாததே சாம்சங் விற்பனை குறைந்ததற்கு
காரணம் என கூறப்படுகிறது
காரணம் என கூறப்படுகிறது