கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பருவமழை மழை பெய்து வருவதால் சென்னை,
கடலூர் உட்படச் சில மாவட்டங்கள் 2015க்கு பிறகு மீண்டும் வெள்ளக் காடாக மாறியுள்ளது.
எனவே சில ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீடிட்ல் இருந்தே வேலை
செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் பல பகுதிகள் பருவமழையால் நீரில் மூழ்கியுள்ளது, சில இடங்களில் வீட்டை
விட்டு வெளியில் வர முடியாத சூழல் உள்ள நிலையில், நகராட்சியும் தெருக்களில்
தண்ணீர் தேங்காமல் இருக்கச் சாலைகளை வெட்டி மக்களை வீடுகளில் முடங்கச்
செய்துள்ளது.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இன்ஃபோசிஸ், காக்னிசென்ட் போன்ற ஐடி நிறுவனங்கள்
முக்கிய ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுங்கள் என்று கூறியுள்ளது.
தமிழக அரசு நேற்று இரவு முதல் தனியார் நிறுவனங்களை விடுமுறை அளிக்கவும்,
முடிந்தால் வீட்டில் இருந்தபடியே ஊழியர்களை வேலை செய்யச் சொல்லுங்கள் என்றும்
உத்தரவிட்டுள்ளது.
தற்போது சென்னை உள்ள சூழலில் 70 சதவீதம் வரை நிறுவனங்களில் பணிகள்
நடைபெற்று வருகின்றன. ஆனால் 30 சதவீதத்தினர் வீட்டில் இருந்த படி வேலை செய்தும்,
விடுமுறையிலும் உள்ளனர்.