பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள்
பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள் – ஓர் அதிரவைக்கும் அறிக்கை!
வீடுகளிலேயே இனிப்பு, காரம் செய்து சாப்பிட்ட காலமெல்லாம் மலை யேறிப்போக,
தெருவுக்குத்தெரு பானிபூரி, சில்லிசிக்கன் கடைகள் முளைத்து விற்ப னையில் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றன. வட மாநிலத்து உணவான பானிபூரியை நம் மக்கள் ஆரத் தழுவிக் கொண்ட னர்.
சிறிய பூரிக்குள் மசாலா வைத்து, புதினா, மிளகு கலந்த ரசத்தில் மூழ்க வைத்துக் கொடுப்பதை நாம் லபக்கென ருசிக்கிறோம். அந்த ருசிக்குப் பின்னே…
பானிபூரி சுடுவதற்கான மாவை காலில் மிதிக்கிற புகை ப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரபரப் பாக பகிரப்பட்டது. அது மட்டுமல்ல… சாலையோர தள்ளு வண்டிக் கடைகளில் பானி பூரி விற்கப்படுகிறது. சில கடைகள் சாக்கடை க்கு அருகிலே யே இருக்கின்றன.
சுற்றுச்சூழலே சுகாதாரமற்று இருக்கிறது.
பூரியை பெருவிரலால் உடைத்து அதனுள் மசாலாவைத் திணித்து புதினா நீரில் முக்கி எடுக்கின்றனர். கை பெருவிரல் நகத்தில் படிந்திருக் கும் அழுக்கு பானிபூரியிலும் ஒட்டிக் கொள்ளும்.
இப்படியாக சுகாதாரக் குறைபாடுள்ள பானி பூரியை சாப்பிடும் நமக்கு என்ன ஆகும்?
கையால் உடைத்து, தண்ணீரில் முக்கிக் கொடுக்கிறவரது கை எந்தளவு சுத்தமாக இருக்கிறது என்பதைப்பார்க்கவேண்டும். Hookworms, Pinworms போன்ற புழுக்கள் கைகளில் இருந்து தான் பரவுகின்றன. அதைச் சாப்பிடும் போது வயிற்றில் இப்புழுக்கள் உற்பத்தியா வதற்கான வாய்ப்புகளதிகம். கைகளி ல் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வாந்தி, வயிற்று ப்போக்கு ஆகியவைஏற்படலாம். வைரஸ் மூல ம் பரவும் ஹெபடைடிஸ் ஏ’ ஏற்படுவ தற்கான அபாயமும் உள்ளது.
பூரி தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணெய் எப்படிப்பட்டது என்பதும் அவசியம். எண்ணெயை ஒரு முறை தான் கொதிக்க வைத்து பயன்படுத்தவேண்டும். நடைமுறையிலோ எண் ணெயை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தும்போது அந்த கெட்டஎண்ணெய் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
புதினாரசம் தயாரிக்கப்பயன்படுத்தப்படும் தண்ணீ ர் சுகாதாரமற்றதாக இருந்தால் அது பற்பல விளை வுகளை ஏற்படுத்தும். எனவே தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற, சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லாத இத் தகைய உணவுகளைத் தவிர்ப்பது அவசியம் .
நொறுவை உண வுகளிலேயே அதிகம் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பது பானி பூரியில்தான். சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பானி பூரிகளை சாப் பிடாமல், சுகாதாரமான முறையில் தயாரிப் பதை சாப்பிடலாம். குறிப்பாக இவற்றை குழ ந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டும்.
மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்வதை 5 வேளையாக பிரித்து எடுததுக் கொள்வது நல்லது. பொதுவாகவே எல்லோருக்கும் மாலை வேளை யில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடுவதால் தான், ஏதாவது சாப்பிடத்தோன்றுகிறது. மாலை வேளையில் கொஞ்சம் சாப்பிடுவதை அவசியம் பின் பற்ற வேண்டும். அப்போதுதான் இரவு வேளையில் தேவையான அளவு மட்டுமே உணவை எடுத்துக் கொள்வோம்.
குழந்தைகள், கர்ப்பிணிகள்,சர்க்கரை நோயாளிகள் புரதச்சத்துள்ள உணவுப் பொருட்களான தயிர்வடை, பச்சைப் பயறு அடை, உளுந்தங்களி, கொண்டைக்கடலை, முளைகட்டிய பயறுக ளை சாப்பிடலாம். எடை குறைக்க நினைப்பவர்கள் ஃப்ரூட் சாலட், முளைகட்டிய பயறு வகைகளை பச்சையாக சாப்பி டலாம். பானிபூரிசாப்பிடுவதால் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனும்போது ருசிக்காக ஏன் நோயை விலை கொடுத்து வாங்கவேண்டும்? நாம்தான் மாற்றி க்கொள்ள வேண்டும்!
http://tmpooja.com/shop/herbal-products-health-natural-remedies-organic-herbs-shop-medicines-online/araikeerai-koondhal-thylam/